அன்புடையீர்,
அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள். என் பெயர் பிரியதர்ஷினி பிரசாத். நம் மத்திய புளோரிடா முத்தமிழ் சங்கத்தில், கடந்த ஐந்து வருடங்களாக சங்க உறுப்பினராகவும், இயன்றளவு தன்னார்வத் தொண்டாற்றி வருவதில் பெருமைக் கொள்கிறேன்.
தானஇன் புறுவது உலகுஇன் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார்.
-திருவள்ளுவர்
பொருள்:
கற்றக் கல்வியால், தான் மட்டுமின்றி உலகமும் பயன் அடைவது கண்டு கற்றறிந்தவர்கள் மேலும் மேலும் தாம் கற்கவும், கற்பிக்கவும் விரும்புவார்.
மேலே கூறப்பட்ட திருக்குறளின்படி நம் MSCF-சங்க உறுப்பினர்களும் தங்களுக்கு தெரிந்ததை பிறருக்கு தெரியப்படுத்தவும், கற்றுக் கொள்ளவும் உதவியாக கட்டுரைகள், கவிதைகள், சமூக கருத்துக்கள், ஓவியங்கள்,சமையல் குறிப்புகள் மற்றும் பிற துறையைப் பற்றியும் தமிழிலும், ஆங்கிலத்திலும் வெளியிட ஒரு பொது மேடையை இந்தப் “பூஞ்சோலை” – வலைத்தள பத்திரிக்கை அமைத்துத் தரும் என நம்புகிறேன். மேலும், நாளைய உலகின் நாயகர்களான நம் சிறுவர், சிறுமியர் நம் தாய் மொழியான தமிழிலும், அவர்களின் தனித் திறமையால் தமிழ் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் மென்மேலும் மேலோங்கச் செய்ய வேண்டும் என்ற முனைப்புடன் தொடங்கப்பட்டதே “பூஞ்சோலை”.
இந்தப் பூஞ்சோலை பல வண்ணங்களில் மலர “MSCF 2020 EC TEAM”– சார்பாக உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன். அடுத்து வரும் இதழ்களில் உங்கள் படைப்புக்களை வெளியிட தயவு கூர்ந்து “https://forms.gle/QQ1Fx511hmECVPBH9” – என்ற இந்த இணைப்பில் உள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து, அதில் உங்களின் படைப்பை பதிவேற்றம் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
பின்குறிப்பு:
v இந்த பூஞ்சோலை பத்திரிக்கை நம் - MSCF முகப்பு பக்கத்திலேயே இருப்பதால் இது நம் சங்க உறுப்பினர்களின் படைப்புகள் மட்டுமே பிரதி இடப்படும்.
v பதிப்புரிமை உரிமையாளரிடமிருந்து அனுமதி பெற்று வெளியிடப்படும்.
v எங்கள் வலைத்தள பத்திரிக்கையில் உறுப்பினர் வெளியிடும் கருத்துகள் மற்றும் தகவல்களுக்கு MSCF எந்தப் பொறுப்பையும் ஏற்காது.
v அதோடுமட்டுமல்லாமல் நீங்கள் அனுப்பும் தொகுப்புகள், ஒரு குறிப்பிட்ட நபரையோ அல்லது சமூகத்தையோ சாடுவதாக இருப்பின் அத்தகைய தொகுப்புகள் பொதுநலம் கருதி வெளியிடப் படாது.