மத்திய புளோரிடா முத்தமிழ் சங்க இயக்குனர் குழுத் தலைவர் - வாழ்த்துரை
மத்திய புளோரிடா தமிழ் சங்க உறுப்பினர்களுக்கு முதற்கண் வணக்கம்.
நம் தமிழ் சங்கம் தொடங்கி முப்பத்துநான்காம் ஆண்டில் பயணித்துக்கொண்டிருக்கிறோம் என்று நினைத்தாலே உள்ளம் மகிழ்கிறது. இந்த தருணத்தில் நம் சங்கத்தை தொடங்கியதிலிருந்து இன்றுவரை சங்கம் வளர உதவிய அத்துணை உருவாக்கிய, நெறிப்படுத்திய, செயல்படுத்திய குழுக்கள் மற்றும் அதனினும் மேலாகிய அனைத்துவிதமான உறுப்பினர்களுக்கும் நன்றியையும், வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
நாம் எல்லோரும் ஏற்கனவே அறிந்த உலகளாவிய நோய் கிருமி அச்சுறுத்தலால் சற்றே நம் பணிகளில் காலதாமதங்களை சந்தித்தாலும், நம் தமிழ் உணர்விலும் புத்துணர்ச்சியிலும் என்றும் தவறமாட்டோம் என்று விரைவில் வீறுகொண்டு பணியாற்ற தயாராகிக்கொண்டிருக்கிறது நம் மத்திய ப்ளோரிடா முத்தமிழ் சங்கம். அதற்கொரு உதாரணமே இந்த பூஞ்சோலை இதழ் வெளியீடு.
பூஞ்சோலை இதழை புதுப்பொலிவுடன் உங்கள் இல்லங்களுக்கு புது கருத்து மலர்களுடன் உள்ளம் மகிழ வந்தடைய முயற்சிகள் மேற்கொள்ளும் திருமதி.பிரியதர்ஷினி பிரசாத் மற்றும் பத்திரிக்கை குழு, இந்தாண்டின் செயற்குழு நண்பர்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
உங்கள் நண்பர்களையும் நம் மத்திய புளோரிடா முத்தமிழ் சங்க உறுப்பினர்களாகப் பங்குபெறச்செய்து உலகின் தலைச்சிறந்த செம்மொழியாம் நம் மொழியையும், தமிழ் கலை, கலாச்சாரம், பாரம்பரியம், பண்பாட்டினையும் அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச்செல்ல உதவவும்.
வாழ்க தமிழ்! வளர்க நம் முத்தமிழ் சங்கம்!!
பாபு பாலசுந்தரம்
Chairman MSCF Board of Directors